Showing posts with label டைரி. Show all posts
Showing posts with label டைரி. Show all posts

Friday, 3 January 2020

டைரி-ஜனவரி 3

இன்று காலை மூன்று மணிக்கே கொஞ்சம் முட்டிக்கொண்டு வந்தது. எழுந்தால் தூக்கம் கலைந்துவிடும் என்று அப்படியே படுத்துக்கொண்டேன். இருந்தும் அவஸ்தையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு இருந்தேன். கடைசியில் பொறுக்க முடியாமல் எழுத்து சென்று காரியத்தை முடித்து விடுதலை பெருமூச்சுடன் திரும்பிய பொழுது என் அறையிலிருந்து என்னுடைய ஆறு மணி அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டது. 

இன்றும் நேற்று போலவே புகை மண்டலம். என்னை பார்த்ததும் ரோட்டில் ஒரு நாய் குடு குடுவேன் ஓடி என் பக்கத்தில் வந்து என் பின்னால் ரெண்டடி நடந்து நின்றது. இதே போல தான் முன்பொரு முறையும் செயத்து. என்ன நினைத்து செய்கிறது!!

அந்த வயதானவர் இன்றும் குப்பை தொட்டியில் ஏதோ தேடிக்கொண்டிருந்தார். அவரின் கையில் சேர்க்கானவே எடுத்த வாட்சும் இந்நூல் சில பொருட்களும் இருந்தன. அவரின் பக்கத்து மரத்தில் இரண்டு பச்சை கிளிகள் குச்சியின் மீது அமர்ந்து ஆடிக்கொண்டிருந்தது.

ரயிலில் வெக்கை நாவலை படித்தபடி பயணத்தை முடித்தேன். 

அதன் பிறகு மாலை எப்படி வந்தது எனவும் எப்பொழுது வீட்டுக்கு வந்து இப்படி படுக்கையில் விழுந்தேன் எனவும் ஞாபகம் இல்லை. சுபாரஸ்யம் இல்லாத சம்பவங்கள் எப்பொழுதும் கொஞ்சம் சீக்கிரமாக மறந்து விடுகின்றன. எனக்கு உடனே மறந்துவிடும்.

Related Articles